திலகவதியார் இல்லத்தில் ஒர் மழலைப் பட்டாளம்

Date: 01/06/2013

போர் எனும் காரிருள் மறைய அமைதி எனும் வெளிச்சத்தில் தெரிகிறது அந்த மழலைப் பட்டாளம். இவை வருங்கால அமைதிக்காக பூத்த வெள்ளைப் பூக்கள். பிள்ளைகளை பாதுகாக்க அவர்களுக்கு ஓர் இடம் தேடி உழைத்த சில உயர்ந்த மனம் படைத்த யுவதிகளுடன் உரையாடினேன். அவர்களை என்னவென்று விவரிப்பதென்று தெரியவில்லை. ஒரு ஆடம்பரமில்லாத தன்னலமற்ற மாந்தர், அவர்கள்.

இந்த மழலைப் பட்டாளத்தின் நலனையும் பாதுகாப்பையும் பற்றியே பேசுவகள். இவர்களை என்னவென்று வர்ணிப்பது. இவர்கள் அன்னை Theresa வடிவில் உழைக்கும் சாதாரண பெண்மணிகள். பிள்ளைகள் இடையிடையே வந்து கதவோரத்தில் நின்று “Good Morning, Uncle” என்று கீச்சிட்டுவிட்டு ஓடுகின்றனர். வளர்ந்த பிள்ளைகள் அமைதியாக வந்து காலை வந்தனம் சொல்லிச் செல்கின்றனர். இதனிடையே திருமதி. சசிகலா, திருமதி. சிவநாதன், திருமதி . பத்மநாதன், அகல்யா ஆகியோருடன் உரையாடல் தொடர்கிறது.

என்னை பழுகாமத்துக்கு கூட்டிச் சென்ற சிங்கள மொழியே பேசும் கார் சாரதி நடப்பவற்றை பார்த்துகொண்டிருக்கிறார். இதனிடையே சிறிய உணவும் தேநீரும் தந்து உபசிரிக்கின்றனர். தமிழ் மொழியே புரியாத கார் சாரதியுடன் சிங்களத்தில் உரையாட ஒருவரை அழைத்து வருகின்றார்கள். அவர் தான் திலகவதியார் இல்லத்துக்கு தோள் கொடுத்து நிற்கும் அன்பர் விக்னேஸ்வரன். வெளி நாடு சென்று உழைத்து விட்டு 10 வருடங்களுக்கு பிறகு ஊர் திரும்பியிருக்கிறார். விக்னேஸ்வரன் சிங்களத்தில் சகசமாக உரையாடி என்னை அங்கு கூட்டி சென்றவரின் நெஞ்சை நிறைவு செய்கிறார்.

நேரம் உருண்டோட மதிய நேரம் ஆகிவிட்டது. ஸ்தாபகர்களும் ஆங்காங்கே சென்று ஏதோ செய்கின்றார் போலும்.

மதிய நேர விருந்தோம்பல் நேரம். மழலைப் பட்டாளம் ஒரு முயல் கூட்டம் போல் வந்து சாப்பாட்டு ஹாலில் அமருகின்றனர். அவர்களுடன் நாமும் அமர்கிறோம். ஒரு சிறுமியின் இனிய குரலில் பஜனை அந்த அறையை நிரப்புகிறது. அதன் பிறகு ஸ்ரீதாவின் சங்கீத கை வரிசை. அந்த நாளையும், கிடைத்த உணவையும் ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்கிறனர் சிறுமிகள். மனம் நிறைந்து பரிமாறிய உணவு வயிற்றையும் நிரப்புகிறது.

அதன் பிறகு மழலைப் பட்டாளத்துடன் படங்கள் பல எடுத்து வருங்கால நினைவுகளில் பதிவு செய்துகொண்டோம்.

 

ஸ்தாபகர்களுடன் SWO அலுவலகம் விஜயம்.

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை பார்த்தேன். கணணி வசதிகளுடன் வகுப்பறைகளோ பிரமாதம்.

வாழ்க்கை எங்கே போய் முடியும் என்ற ஏக்கம் மறைந்து ஒர் ஒளிமயமான எதிர்காலம் யாவருக்குமே உண்டு என்ற முறையில் நிமிர்ந்து நிற்கிறது இந்த ஸ்தாபனம். சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகள் சுவர்களை அலங்கரிக்க அந்த மாபெரும் மனிதரின் உருவப் படங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன. இதனிடையே இந்த ஸ்தாபனதுக்காக உழைக்கும் சில தலைவர்களின் படங்கள் ஆங்காங்கே நின்று புன்னகைக்கின்றன. கோடைக் கால வெயில் உச்சியை சற்று தழுவ தரையில் பச்சைப் பசேல் என்று மரக்க்கரி தோட்டம் ஸ்தாபனத்தின் பின் வெளியை அலங்கரிக்கிறது.

“ஊருக்கென்று வாழ்ந்த உள்ளம் சிலைகள் ஆகலாம்,
உறவுக் என்று அழுத உள்ளம் மலர்கள் ஆகலாம்,
யாருகென்று அழுத போது தலைவன் ஆகலாம்,
மனம், மனம் அது கோவில் ஆகலாம்…
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்”
– கவிஞர் கண்ணதாசன்

With Love Man is GOD – சத்ய சாய் பாபா.

இப்படிக்கு அன்புடன்
த .ஜெயபாலன்
Member – Fund for Mahalirillam

 

         ஸ்ரீதா                                                                                    மழலைப் பட்டாளம்